என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை
நீங்கள் தேடியது "பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை"
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி, சமீபத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அரசிடம் கேட்டிருந்ததாக முன்னாள் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். #Bukharikilling #RisingKashmir #ShujaatBukhari
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), கடந்த 14-ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றொரு பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சுஜாத் புகாரி
இதனிடையே காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு சுஜாத் புகாரி காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து கேட்டிருந்ததாக இந்திய உளவுத்துறையின் (RAW) முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாட் தெரிவித்துள்ளார். #Bukharikilling #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சுட்டில் படுகாயமடைந்த ஆசிரியரின் 2-வது பாதுகாவலரும் உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.
நேற்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பத்திரிகை ஆசிரியரின் இரண்டாவது பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
ஜம்மு காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.
இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் காரில் சென்றபோது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.
பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், பத்திரிகை ஆசிரியரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் செயல் மிகவும் கோழைத்தனமானது. பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி மிக துணிச்சலானவர். அவரது இறப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக போராடி வந்தார். அவரது இறப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari #RajnathSingh #RahulGandhi
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி என்பவரை பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.
இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.
பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார். #Srinagar #RisingKashmir #ShujaatBukhari
×

X